Personal website + blog of Ambarish Sridharanarayanan.
தமிழகத்தில் விளங்கும் மல்லி வகய்கள் பற்பல. அவய் அனய்த்துமே இறய்வழிபாட்டிலும் தலயழகிற்கும் நறுமணத்திற்கும் பயன்படுகின்றன. மணம், மென்மய், வெண்மய் ஆகியவற்றினால் மல்லிப்பூ எத்தனயோ உவமய்களிற்கு ஆளாகும். பழமென்றால் தமிழில் எவ்வாறு வாழயோ அவ்வாறே பூவென்றால் மல்லிகய். மல்லிகய் தமிழர்ப் பூவென்றே சொல்லலாம்.
அப்பூவின் வகய்கள் தமிழில் மட்டுமே அறிந்தேன். வடமொழியிலும் ஆங்கிலத்திலும் உயிரியல் இருசொற்பெயரீட்டிலும் பெயர்கள் அறியாது ஆராய்ந்தேன். அகராதி மற்றும் இணயத்தின் கிடய்த்த சில பெயர்கள் மேல் உள்ளன.
| தமிழ்ப்பெயர் | வடமொழிப்பெயர் | ஆங்கிலப்பெயர் | இருசொற்பெயர் |
|---|---|---|---|
| பிச்சி, சாதிமல்லி | 𑌜𑌾𑌤𑌿𑌃 𑌉𑌤 𑌮𑌾𑌲𑌤𑍀 | Royal jasmine | Jasminum grandiflorum |
| நித்தியமல்லி, பெருமல்லி | ? | Brazilian jasmine | Jasminum fluminense |
| குண்டுமல்லி, இருவாய்ச்சி | 𑌨𑌵𑌮𑌲𑍍𑌲𑌿𑌕𑌾 | Arabian jasmine | Jasminum sambac |
| முல்லய், உச்சிமல்லி | 𑌯𑍂𑌥𑌿𑌕𑌾 | ? | Jasminum auriculatum |
| கத்தூரிமல்லி | 𑌕𑍁𑌨𑍍𑌦𑌃 | Star jasmine | Jasminum multiflorum |
| காட்டுமல்லி | 𑌵𑌨𑌮𑌲𑍍𑌲𑌿𑌕𑌾 | Wild jasmine | Jasminum angustiflorum |
பட்டியலில் குற்றம் குறய்கள் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன்.